பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மக்கட்பண்புக் கோட்பாடு கவிமணியின் பாடல்களில் மக்கட்பண்புக் கோட்பாடு (Humanism) பல இடங்களில் காணப்படுகின்றது. சமய நூல்க ளும் சமயச் சார்பான நூல்களும் மறுமையில் வீட்டுலகம் அடைவதற்கு உதவுபவை. கிரேக்க இலக்கியங்களோ டொப்ப, மக்களது இல்வாழ்விற்கு உதவி அவர்களுடைய நலத்தைப் பேணுபவை நமது பண்டைய இலக்கியங்களா கும். இவற்றை நன்கு கற்பதால் மக்கட்பண்பு சிறந்து விளங்கும் என்பது அறிஞர் கொள்கை. தமிழின் மறுமலர்ச் சியில் இதுவும் ஒர் அம்சமாகும். திருக்குறளைக் குறித்து, வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ் மாதின் இனிய உயிர்நிலையை (1)* என்பார். மேலும், மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெலாம் சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம்" என்று சிறப்பிப்பார். இன்னும், ஆதி மனுநூலைத் - திருத்தி அமைத்த நன்னூலாம்; நீதி எடுத்தோதப் - புவியில் நிகரி லாநூலாம் (3) புத்தகக் காட்டினிலே - புகுந்து புத்தி மயங்குவதேன்? பத்தியோ டிந்நூலை - நிதமும் படித்தல் போதுமையா! (4) என்று பாராட்டிப் பேசுவார். 1. ம.மா: இலக்கிய பஞ்சகம் - 1 2. மேலது. இலக்கியம் - திருக்குறள் - 1 கவி-14