பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு இந்தப் பறவைகளின் வாழ்வில், சாதிச் சண்டையில்லை - ஒயாச் சமயச் சண்டையில்லை; வேத சாத்திரங்கள் - கூறும் விதிவிலக்கும் இல்லை (2) பசுவைக் கொன்றுவிட்டுக் - கொன்ற பாவம் நீங்கிடவே பசுவின் தோற்செருப்புத் - தானம் பண்ணு வதுமில்லை (5) செக்கினை விழுங்கி - அதனைச் சீரணம் செய்யச் சுக்குக் கஷாயம் - குடிக்கும் தொழில்கள் ஏதுமில்லை. (6) குடிகெ டுத்துவிட்டுப் - பழிகள் கோடி செய்துவிட்டுக் கடவுளை வணங்கி - நிதமும் கண்ணி விடுவதில்லை (7) நாளைக் கில்லையென - இன்று நைந்து நைந்துருகி, மூளை கலங்கியே - இருந்து முணுமு னுப்பதில்லை (10) அச்சக் கும்பிடில்லை; - நடிக்கும் அன்புக் கும்பிடில்லை; பிச்சை யெடுப்பில்லை - காட்டும் பித்த லாட்டமில்லை (11) தேரும் பொதுவுடைமை - ருஷிய தேசத்தி லுள்ளதெல்லாம் பாரிற் பறவைகளைக் - கண்டு படித்த பாடமேயாம் (21) + 195 -j