பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு -j- 197 4 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது உலகினர் வாயில் உதிரும் பொன்மொழி. இவ்வுண்மையினைக் கவி மணி, நன்மை விதைத்திடில் - என்றும் நல்மையே விளையும்; தின்மை விதைத்திடில் - அதுபோல் தின்மையே விளையும் (5) என்று விளக்குவார். மேலும் இதனை ஓர் உவமையால், கரும்பில் என்றுமே - வேம்பின் கனி கனிவதில்லை; விரும்பிடா வேம்பில் - கரும்பும் விளைவ தொன்றுமில்லை (6) என்ற பாடல் மூலம் தெளிவாக்குவார். ஆதலால், பொய் களைந்திடுவோம் - மெய்யைப் போற்றி நின்றிடுவோம்; செய்கடனை நிதம் - உலகில் செய்து வாழ்ந்திடுவோம் (7) என்பது நமக்கு அப்பெருமான் உணர்த்தும் அறிவுரை. இதனையே நித்திய நைமித்தி கருமங்கள் என்று சமய நூல்கள் குறிப்பிட்டுக் காட்டும். ஞான உபதேசம்: சில கருத்துகளை மனத்திற்கு உபதே சிப்பதாகக் கவிதைகள் அமைந்துள்ளன. இறைவனின் திருநாமங்களை நாவினால் ஒலியின்றி நவிற்றிக் கொண்டு தியானத்தில் ஈடுபடுமாறு ஆற்றுப்படுத்துகின்றார். உருவ வழிபாட்டிற்கு இவர் முக்கியத்துவம் தருவதில்லை. பூ, கற்பூரம் முதலிய ஆராதனப் பொருள்கள்கூடத் தியானத்