பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 址98 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு திற்கு தேவை இல்லையல்லவா? மனத்தில் ஞானதீபத்தை ஏற்றுமாறு உபதேசிக்கின்றார். ஒரு வகையில் இது வள்ளல் பெருமானின் கொள்கையை ஒத்துள்ளது. மனமே! நீயும் வருந்துவதேன்? மகிழ்ந்து தேவி திருநாமம் தினமும் மறவா தன்போடு தியானம் செய்து வாழ்வாயே; கனமா மணிசே கண்டியெலாம் கணக ணென்று முழக்காது. நினைவை ஒடுக்கி நிகழ்த்திடும் அந் நிட்டைக் கேதும் நிகருண்டோ? (1) மண்ணினைக் கல்லதனைச் - செம்பினை வடிவம் செய்துவைத்துப் பண்ணிடும் பூசையாலே - யாதுமோர் பலன்அ டைவதுண்டோ? எண்ணிய எண்ணிலெழும் - உருவை இதய கமலத்தில் திண்ணமாய் ஏற்றிவைத்து - நிதமும் செயங்கள் செய்வாயே (2)” என்று நெஞ்சிற்கு உபதேசிக்கின்றார். இஃது ஒருவிதமான பூசை. இந்நிலையில், காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும்பாலாய் நிறையநீர் அமையஆட்டிப் பூசனை ஈசனார்க்கும் போற்றஇக் காட்டினோமே" என்ற அப்பர் அடிகளின் திருப்பாடலும், 5. வையமும் வாழ்வும் - ஞானோபதேசம் - 1,2 6. அப்பர் தேவாரம் 4,76:4