பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு 卡 201 + மாடுகளை மட்டிலும்தான் ஒட்டி வந்து கறக்கின்றனர்; கன்றுகளின்றியே அவை பால் சுரக்கின்றன. இவை கன்றுக ளின்மீது பாசம் இல்லாதவை; கன்றுகளைப் பற்றியே நினைவில்லாதவை; இவற்றிற்குத் துணையாகத் தோற்கன் றுகளைக் கொணர்கின்றனர். இதனைக் கண்டு பால் மாடு கள் சுரப்பு விடுகின்றன. இக்காட்சியினை நேரில் கண்ட வைணவ உரையாசிரியர்கள் 'கன்றுக்கு இரங்கும் பசு தோற் கன்றுக்கும் இரங்குமாப் போலே' என்ற உவமை யைக் கையாண்டு எம்பெருமானுடைய கருனைத் திறத்தை விளக்குவர். நாய்க்கும் கிளிக்கும் காட்டும் பராம ரிப்பு சொல்லுந் தரமன்று. சொந்தப் பிள்ளைகளைவிட இப்பிராணிகளை மிகச் செல்லமாக வளர்க்கின்றனர். குதிரைகள்: இன்று குதிரைகள் வண்டி இழுக்கவும், வட்டரங்குகளில் சுற்றிச் சுற்றி ஒடவும், தனிப்பட்டோர் சவாரி செய்யவும், ஒட்டப்பந்தயத்தில் பயன்படுத்தவும், ஊர்க் காவலர் படையில் சவாரி செய்யவும், போர்த் துறையில் குதிரைப் படைகளாகவும் பயன்படுத்தப் பெறு கின்றன. இவற்றையெல்லாம் குதிரைகள் விரும்புவ தில்லை; வெறுக்கின்றன. தம் குறைகளைக் குதிரைகளே சொல்லுவதாகக் கவிமணியின் பாடல்கள் அமைந் துள்ளன." சிலர் குதிரைகளின் வால் மயிரை வெட்டிக் குஞ்சம் போல் ஆக்கி விடுகின்றனர். வளர்ந்து வரும்வாலை வெட்டி வெட்டித் - தேய்ந்த மாறுபோல் ஆக்கிக் குறைத்திடும் நீர்; தளர்ந்த பொழுதெங்கள் ஈப்பகை ஒட்டிடத் தக்க உதவிகள் செய்வதுண்டோ? (2) 10. ம.மா.: உள்ளமும் உணர்வும் - குதிரைகள் புலம்பல்