பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

号 202 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு வாயில் கடிவாளம் போடுவதையும் உடம்பின் குறுக்கே சேணம் இடுவதையும் அவை விரும்புவதில்லை; பார்வையைக் கட்டி மறைப்பதையும் வெறுக்கின்றன. இரும்புக் கடிவாளம் மாட்டுவதேன்? - வாயை ஈசன் படைத்தது இதற்காமோ? பெரும்புவி மீதினில் உங்களுக்கும் - இந்தப் பேதைகள் செய்த பிழைகள் உண்டோ? (3) வம்புகள் பேசிடும் வாயையன்றோ - பூட்டி வைப்பது நீதி முறையாகும்; நம்பி யிருப்போர்க்குத் துன்பம் இழைப்பது நல்லோர் பெரியோர் செயலாமோ? (4) வெள்ளிப்பூண் கட்டிய சேணம்இட்டால் - நெஞ்சு வேதனை யில்லாது இருந்திடுமோ? அள்ளி யிடும்பிடிப் புல்லுக்காக - எங்கள் ஆவியைக் கொள்வது அழகாமோ? (5) பக்கம் திரும்பியே பார்த்திடாமல் - எங்கள் பார்வையைக் கட்டி மறைப்பது மேன்? திக்கெலாம் தந்த பிரமனிலும் - நீவிர் தீவிர புத்தி உடையவரோ? (6) எல்லாச் செயல்களிலும் பங்கு கொள்ளும் குதிரை களின் கால் குளம்புகளின் பாதுகாப்புக்காக லாடம் கட்டு வதை அவை விரும்புவதில்லை. தோள் பட்டைகளைக் கட்டுவதையும் அவை வெறுக்கின்றன. திண்ணிய லாடமும் கட்டுவதேன்? - அதில் தீயெழ எம்மையும் ஒட்டுவதேன்? புண்ணியம் நீர்செய்ய வேண்டாமையா! - எம்மைப் போக்கிலே விட்டிடில் போதுமையா! (7)