பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு + 203 + எண்ணிக்கை அற்றதோல் பட்டைகளைக் - கட்டி எம்மீது இறுக்கி முறுக்கி வைப்பீர்; கண்ணுக் கழகவை ஆயிடினும் - எங்கள் கண்டம் நெரிவ தறியீரோ? (8) குதிரையோட்டப் பந்தயத்தில் ஆள்ஏறி அவற்றைப் பறக்கச் செய்வதும், அவற்றின் முதுகை முறிப்பதும், அவற்றிற்குச் சொல்லொணாத் துயரை விளைவிக்கின்றன; இவற்றை எண்ணி அவை கண்ணிர் வடிக்கின்றன. பற்றி முதுகினில் ஏறிக்கொள்வீர் - எம்மைப் பட்சிகள் போலப் பறக்கச் செய்வீர் சற்றும் இரக்கம் இலாதவரோ? - நீங்கள் சாத்திரம்;கற்ற பயன் இதுவோ? (9) ஈசன் அளித்தகால் இரண்டிருக்க - நீரும் எங்கள் குறுக்கை முறிப்பதேனோ? தாசரைப் போல்வேலை செய்திடினும் - தயை சற்றும் உமக்கு வருவதுண்டோ? (10) வண்டியில் மாட்டுவதும், நேரம் காலம் இல்லாமல் தட்டி ஒட்டுவதும், கையில் சவுக்கையும் காலில் முட்களை யும் கொண்டு விரட்டுவதும் நொண்டினாலும் விடாக் கொண்டனாக நோவ அடிப்பதும் அடாத செயல்கள். கையில் சவுக்கொன்று போதாதென்றோ - இரு காலிலும் முட்களைக் கட்டிக் கொண்டீர்? ஐயையோ ஏழையேம் ஆவி பறித்திட ஆயிரம் கூற்றுவர் வேண்டுமேயோ? (11) வண்டியில் கொண்டெமை மாட்டுகின்றீர் - காலை மாலையெல்லாம் தட்டி ஓட்டுகின்றீர்; நொண்டினா லும்விட்டுப் போகமாட்டீர் - உடல் நோவ அடித்து வெருட்டு கின்றீர் (12)