பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு + 209 + டைய உழைப்பில் சுயநலம் சிறிதும் இல்லை; துயவாழ்க் கையுடையவர். 'கற்றபின் நிற்க அதற்குத் தக என்று வாழ்ந்து காட்டியவர். கற்றவர் பலபேர் உண்டு; கவிகளும் புனைய வல்லார்; மற்றவர் வியக்கப் பேசி மகிழ்தரும் எழுத்தும் செய்வார்; கற்றதை உணர்ந் தடக்கிக் கசடற வாழ்ந்து காட்டி நிற்றலை யன்றோ எங்கள் 'கவிமணி நினைவு கூட்டும், (2) என்று கவிமணியைப் பாராட்டி மகிழ்வார் நாமக்கல்லார். ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. பிற சமுதாய வரலாறுகளை ஊன்றி நோக்கி உணர்ந்தவர். ஆடம்பரம் சிறிதும் இல்லாதவர்; விளம்பரத்தில் பற்றில்லாதவர். ஆதலால் சொற்பொழிவு அரங்குகளிலும் பிரசாரக் கூட்டங்களிலும் இவரைக் காண் டல் அரிது. ஆனால், அமைதியோடும் உள்ளுணர்வோடும் தமிழ் மக்களது நன்மையையே இடைவிடாது சிந்தித்துப் பணியாற்றி வந்த உயர்குணச் செம்மல். மக்கட் பேறு அற்றவராதலால் அதுபற்றிய பந்த பாசங்கள் இவரைத் தொடுவதில்லை. குழந்தைகளிடம் பேரன்பு கொண்டவர். இவர் படைத்துள்ள குழந்தைப் பாடல்களே இதற்குத் தக்க சான்றுகளாக அமைந்துள்ளன. மலரும் மாலையும் என்ற தமது கவிதைத் தொகுதியை, செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்நூல் உரியதாய் என்றும் வாழ்கவே என்று உரிமை செய்துள்ளமையை அறிந்து நாம் வியந்து மகிழ்கின்றோம். கவி-15