பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இயற்கை வழி இன்பம் இயற்கைப் பொருள்கள் இன்பமயமான சமாதியில் அடங்கிக் கிடக்கின்றன. அந்த அமைதி நிலைக்குக் குந்த கம் விளையாமல் அந்த நிலையைக் கலைக்காமல் - அதனுடன் கலந்து கொள்ளும் இன்பம் உடையவனே கவிஞன். அவன் இயற்கையோடு பழகும் - தோய்ந்து நிற்கும் அதுபவன் வாய்ந்தவன். இயற்கையுடன் அவன் ஒன்றி நிற்கும் நிலையே தனிப் பெருமை வாய்ந்தது. உறங்குகின்ற குழந்தையைத் தாய் அணைத்துக் கொள்வ தைக் கண்டுள்ளோம் அன்றோ? தாய் குழந்தையை மார் போடு சேர்த்தே தழுவிக் கொள்வாள் என்றாலும் அவ்வாறு அனைத்துக் கொள்வதில் குழந்தையின் துயில் கெடுவ தில்லை. அடுத்த கணத்தில் அவளும் தன்னை மறந்து உறங்கி விடுவாள். அவ்விதமே கவிஞனும் இயற்கையை அதன் இன்ப அமைதி கெடாமல் கலையாமல் - குலையாமல் - தழுவுவான்; தன்னையும் உடனே மறந்து விடுவான்; இன்பப் பெருக்கில் மிதப்பான். அதிலிருந்து வெளிவந்தவுடன் இன்ப வெறிபிடித்தவன் போல சில சமயம் பாடுவான்; சில சமயம் ஆடுவான். இவையெல் லாம் கலைகளாகின்றன. அவன் அநுபவத்த இன்பப் பெருக்கில் ஒன்றிரண்டு திவலைகள் அவன் பாடிய பாட்டி லும், ஆடிய கூத்திலும் அமைகின்றன. அதைப் பார்த்தே நாம் உயர்ந்த கவிதைகள், கலைகள் என்று உள்ளம் பூரித்துக் கொண்டாடுகின்றோம். எங்கெங்கெல்லாம் அழகு உள்ளதோ அங்கங்கெல் லாம் இறைவனும் இருப்பதாகக் கொள்வது தமிழரது கொள்கை. இக்கொள்கையே முருகன் என்ற தமிழ்க் கடவுளின் தத்துவம் என்பதைத் தமிழ் முனி திரு.வி.க. போன்ற இறையன்பு கொண்ட பெரியோர்கள் விளக்கிப்