பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

米 216 爱 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு உள்ளமதை ஆகாயம் பரவ விட்டேன்; உள்கரமும் என்கனவில் தீண்டப் பெற்றேன்; மெள்ளஉன்றன் முகம்மறைக்கும் திரையை நீக்கி விழிகளையான் கண்டுதொழக் கருணை செய்வாய்! கள்ளவிழும் வனத்திலெழும் இசையூ டெம்மைக் களிப்பொடுநீ வரவேண்டும் குறிப்பைக் கண்டேன்; வள்ளலுன்றன் திருக்கழலின் ஒலியென் னுள்ளம் மலியநிறைந் தானந்தம் அளிக்கு தையா! (4) ஆறு. இது குட்ரிச் (Goodrich) என்பார் எழுதிய அதி அற்புதமான ஆங்கிலப் பாடல்களின் பாவனையையும் கருத்தையும் தழுவி பாடப் பெற்றது. ஒர் ஆறு பேசும் திறமை பெற்று, தன் வாழக்கையில் சலிப்பு இல்லாத நடையையும், உலகிற்கு உயிரும் உணவும் பசுமையும் கொடுக்கும் பேற்றைத் தனக்கு இறைவன் வழங்கியிருப்ப தில் பெருமிதம் கொண்ட பான்மையையும், மனிதனை ஏளனம் செய்வதுபோல் தோன்றும்படியாகச் சொல்லும் முறையில் அமைந்த எட்டுப் பாடல்கள் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் கழி பேரின்பம் நல்கவல்லவை." கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்கும்.நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன் (i) கட்டும் அணையேறிச் சாடிவந்தேன் - அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டுத் திடர்களும் சுற்றிவந்தேன் - மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன் (2) 5. ம.மா. ஆறு - பக்.72