பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் 贵 22i + அம்புலி அம்ம வாவென்று அழைத்தலும் அவிர்வெண் திங்கள் இம்பர்வந் தானை அஞ்சல்: எனஇரு கரத்தில் ஏந்தி வம்புறு மறுவைப் பற்றி முயலென வாங்கும் வண்ணம் எம்பெருங் களிறே! கான ஏசற்றே எழுந்தி ராயோ?* என்ற பாடல் நினைவிற்கு வருகின்றது. சந்திரனுடைய தன்மைகளிலும் செயல்களிலும் உள்ளத்தைப் பறிகொ டுத்த கவிமணி, பறக்கச் சிறகிருந்தால் வெண்ணிலாவே! - உன்றன் பக்கம் வந்து சேருவேனே, வெண்ணிலாவே (15) என்று சொல்லித் தன் ஆர்வத்தைப் புலப்படுத்திக் கொள்ளு கின்றார். மலர்கள்: இவற்றில் முதன் பகுதியில் ஐந்து பாடல்களும்" இரண்டாம் பகுதியில் ஐந்து பாடல்களும்" உள்ளன. மலர்களே பேசுவனவாகப் பாடல்கள் அமைந் துள்ளன. இங்கும் முதற் பகுதிப் பாடல்கள் முன்மொழி தல் போலவும் இரண்டாம் பகுதிப் பாடல்கள் வழிமொழி தல் போலவும் அமைந்துள்ளன. பூமகளின் புன்னகைபோல் பூத்திடு வோமே! - கம்பன் பாமணக்கும் தமிழன்னைப்போல் பரிமளிப் போமே! (1) 9. கம்ப. யுத்த. இராவணன் சோகப், 50 10. ம.மா. மலர்கள் - பக்.78 11. மேலது - மேலது - 1 பக்.79