பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் + 231 + தராசிலே வைத்து நிறு என்பான் எங்கும் போகாமல் இங்கே யேஇரு என்று சொல்லுவ திவட்கே இசையும் இவள், அடுக்களை வந்திடாள் - அரக்குப் பாவையோ? கரிக்கலம் கையெடாள் - கனகசுந் தரியோ? வாருகோல் ஏந்திடாள் - மகாராணி மகளோ? வெயிலில் இறங்கிடாள் மென்மலர் இதழோ? குடத்தை எடுத்ததிடாள் - குருடியோ? கொண்டியோ? வஞ்சகி இவள்செய் தலையனை மந்திர உபதேசங்களை..... என்று விளக்குவாள். பொதுவாக, கடைசியாக மணந்தவள் மீது அதிக பாசம் வைப்பது கணவன்மார் இயல்பு: இதற்கு மாறாக இருந்தது ஏனோ? மாமியார் கொடுமை: 'அரசியல்' என்ற சொல் இக்காலத் தில் இழிநிலையை விளக்கக் கையாளப் பெறுகின்றது. இதனால்தான் கவி 'மாமியார் அரசியல் என்று மகுடம் சூட்டினார் போலும்! இவள் கொடுமையை, அரிசியை நிதமும் அளந்து வைப்பாள் கொல்ல மிளகைக் குறுக்கி வைப்பாள்; உப்பில் புளியை உருட்டி வைப்பாள்; கறிக்குத் தேங்காய் கருக்கி வைப்பாள்; கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்; தீபா வளிக்குத் தீபா வளியே எண்ணெ யறியும் என்தலை அம்மா! அரைக்க மஞ்சள் அளித்திடா மாமி குளிக்க மஞ்சள் கொடுத்திடு வாளா? இவ்வடிகள் வீட்டு நிர்வாகத்தை விளக்குவன. மாமியின் வெளி அலுவல்களைப்பற்றி விளக்கும் பாங்கு விநோதமாக உள்ளது. இறைவன் எங்கும் இருப்