பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 236 米 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நீதிபதிக் குறிப்பாக, 'இன்ன படியென்று எழுதி விட்ட சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன், விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்; வருகிற வழியாய் வந்துஎனைக் கண்டால் சிக்கெலாம் போக்கி நடத்தித் தருவேன்' என்று சற்றும்வாய் கூசாது உரைக்கும் அந்த உத்தம புருஷன் நிறையா வயிற்றை நிறைத்திடக் கடலைத் திறந்துவிட் டாலும் திகையுமோ? என்று சந்து காட்டுவார். கோர்ட்டில் செலுத்த வேண்டிய படிகளைப்பற்றி, பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும் சாட்சிப் படிகளும் சம்மன்சு படிகளும் கணக்கி லடங்காக் கமிஷன் படிகளும் ஜப்திப் படிகளும் வேலப் படிகளும் வாரண்டுப் படிகளும் வாசற் படிகளும் ஏணிப் படிகளும், இப்படி அப்படி எல்லாப் படிகளும் ஏறி இறங்கி வாணாள் கொடுத்து வாண தீர்த்தம் ஆட ஆளும் நீரோ? என்று படிவகைகளைப் பிட்டு பிட்டு வைப்பார். கோர்ட்டிலும் பிற இடங்களிலும் செலுத்த வேண்டிய பீசுகளைப் பற்றி, கோர்ட்டுப் பீசு குமஸ்தா பீசு கூடிக் காப்பி குடிக்கப் பீசு வெற்றிலை வாங்கிட வேறொருபீசு வக்கில் பீசு மகமைப் பீசு