பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 238 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு தயவாய்ச் சொல்லுவார தக்கில் கேட்பார் இரைந்து சொல்வார், எச்சில் எழுப்புவார்; பார்பார் என்பார் பல்லைக் கடிப்பார்; போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார் அங்கும் இங்கும் அசையாதே என்பார்; குனியாதே என்பார், கோட்டைப்பார் என்பார்; கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் கேள்விகள் பலவும் கேட்க வருவார் ‘ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள் ஒன்றா? இரண்டா? உடன்சொலும் என்பார்; நாம், 'குதிரைக்கு ஏது கொம்பு? என்றால் கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்; கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்; இரண்டா? ஒன்றா? என்பதுதான் கேள்வி, உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம் கேட்டே னாய்ஒய்? காதுகேட் காதோ? என்றெலாம் சொல்லி ஏமாற்றி விடுவார்; குண்டில் விழுந்த குள்ள நரியைப் படுத்தும் பாடெலாம் உம்மைப படுத்துவார் என்று கூறி அச்சத்தை எழுப்புவார். வக்கீல் சாமர்த்தியம்: சிலர் பீசு சரியாக வரவில்லை என்று வழக்கு விசாரணையைத் தள்ளிப் போடுவதுண்டு. சிலர் கட்சிக்காரர்களிடம் அதிகமாகக் கறப்பதற்காகவே விசாரணையைத் தள்ளிப் போடுமாறு வாய்தா கேட்கின்ற னர். வெள்ளையம் பிள்ளை சொல்லுகின்றார்: ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால் பீரங் கிகளும் பின்னிட் டோடும் பொல்லா தவர்அவர், பொல்லா தவர்அவர்,