பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருமக்கள் வழி மான்மியம் ཁ་ཊཱིན་ 243. གྷ་དྷིས་ யும் விற்றுப் பணமாக்கி, வக்கில்சாமி மலரடிகளிலும், குமஸ்தா மாடன் கோவில்களிலும் சாட்சித் தெய்வச்சந்நிதி களிலும் வெற்றிலை பழம் தேங்காய்களுடன் வைத்து வணங்கச் செய்துவிடும். முடிவில் வழக்கு இழப்புதான். வழக்கை இழந்து வாய்மண் ணாகி உண்ண உணவும் உடுக்கத் துணியும் இல்லா தாகி, யாரும் கைவிட, முற்றத் துறந்த முனியுங் கவர்போல் பழுக்கப் பழுத்த பட்டினத் தடிகள்போல் ஊரும் சதம்அல்ல உற்றார் சதம்அல்ல உற்றுப்பெற்ற பேரும் சதம்அல்ல பெண்டீர் சதம்அல்ல பிள்ளைகளும் சீரும் சதம்அல்ல செல்வம் சதம்அல்ல தேசத்திலே யாரும் சதம்அல்ல நின்தாள் சதம்கச்சிஏ கம்பனே - திரு.ஏகம்ப மாலை - 227 என்று கூறி இனித்தோ வாளைக் கஞ்சிப் புரையே கதியெனச் சென்று, பக்கமெங்கும் பரந்து சுற்றிச் சுவான தேவர் துதித்து நிற்க, அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக் காக்கைபா டினியர் கானம் பாட, பலஅடி யார்கள் பலரொடும் கூடி வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு, பட்டைச் சோறும் பாற்சோ றாக ஒட்டுத் திண்ணை உறங்கிட மாக இருப்பதை நோக்கி இரங்கி,இரங்கி, இழந்ததை எண்ணி ஏங்கி ஏங்கி அழுபவர் கண்ணி ஆறாய்ப் போம்வழி டகவி-17