பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 248 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கவிமணியின் பாடல்களில் இத்தகைய படிமங்கள் அமைந்திருப்பதால் பாடல்களைப் பயில்வோர் மனத்தில் இவை தோன்றி கவிதையதுபவத்தைக் கிளர்ந்தெழச் செய் கின்றன; படிப்போரை கவிதையநுபவத்தின் கொடுமுடிக் குக் கொண்டு செலுத்துகின்றன. என்னுளத்து ஞான ஒளி ஏற்றிய மெய்த் தீபம்’ (10), 'பன்னரிய நின்னிசையின் பாலாறு' (8), 'தெள்ளத் தெளிந்த கவியமுதம் (94), ஆரமுதம் ஊறும் இதழ்’ (167), வட்டமாய் உன் கழுத் திலே வானவில்லை ஆரமாய் (253), 'பந்தம் எரியுதோடி - கண்களைப் பார்க்க நடுங்குதடி (271), புன்னை மலரும் - குவளையின் பூவும் கலந்தது போல், மின்னி மிளிரும் உடல் (276), பாலாழி மீது படர்ந்த வெண்ணெய் - ஒரு பந்தாய் உருண்டு திரண்டதுவோ? (312), வெள்ளியோ டம் போலவரும் வெண்ணிலா (316), விரித்துவிடு பாய் காற்றுப் பிடித்து ஒடம், விரைந்து குதித்தோடியழகமையக் கண்டேன் (377), 'புனைந்த சித்திரம்போல் வண்ணாத்துப் பூச்சி சுற்றுதம்மா!' (484), பாகனைய செந்தமிழ்ப் பாமா ரி (1023), ஆராமுதனைய தமிழ்’ (1028), திடம் படைத்த கல் நெஞ்சும் திடுக்கிட்டு நடுநடுங்கிச் சிதறிப் போக: (1048), அன்பின் கடலை அமுத மொழியரசு (1080) என்பன போன்ற சொற்கோவை எழுப்பும் படிமங்களை எண்ணி மகிழலாம். இனி, சிறப்பாக ஒவ்வொரு புலனை யும், பொதுவாகப் பல புலன்களையும் கவரும் படிமங்க ளைக் கண்டு மகிழ்வோம். கட்புலப் படிமங்கள்: பல்வேறு படிமங்களிடையேயும் கட்புலத்தைக் கவரும் படிமங்களே அதிகமாக உள்ளன. இவையே படிப்போர் மனத்தில் நிலையான பதிவினை விளைவிக்கின்றன. கட்புல நரம்பு ஏனைய பல நரம்பு களை விடத் தடித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாகவே இந்தக் காலக் கல்வியில் கட்புல செவிப்புலத் துணைக் கருவிகள் அதிகமாகப்