பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 250 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு அணி யணியாக - அணிகள் அடுக்கி வைத்திடுவன்; மணி மணியான - பொருள்கள் வாரி வழங்கிடுவான் (79) இதில் அணியணியான அணிகள், ‘மணி மணியான - பொருள்கள் என்பன கட்புலப் படிமங்கள். அன்பின் வெற்றியிலுள்ள ஒரு பாடற்பகுதி இது: மீனை வண்டை மானை, அவன் விழிகள் மறக்கச் செய்திடுமே கானிற் படரும் கோவையும் அக் கனிவாய் இதழைக் காட்டிடுமே (158) இதில் 'மீன்', 'வண்டு', 'மான்', 'விழிகள்', 'கானிற்பட ரும் கோவை’ இவை யாவும் கட்புலப் படிமங்கள். செவிப்புலப் படிமங்கள்: காதினால் மட்டும் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்யும் படிமங்களாகும் இவை. கவிமணியின் பாடல்களில் இவற்றைக் காண் போம். குன்றினொடு குழியெலாம் இச்சிறிய வேயின்வரு குழல்கொண்டு சென்று நீயுன் குமுதவாய் வைத்து தவநவமான் இசைகள்செவி குளிரவே ஊதி நிற்பாய் (5) இஃது அஞ்சலி ஆசிரிய விருத்தத்தின் ஒரு பகுதி. இதில் 'நவமான இசைகள் கட்புலப் படிமம். வாச மெழு சோலைவாய் மதுவுண்டு வண்டினம் மதுரகீ தங்கள் பாட (7) இதுவும் அஞ்சலி ஆசிரிய விருத்தமே. இதில் 'மதுர கீதங்கள் செவிப்புலப் படிமமாகும்.