பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடலில் படிமங்கள் - 253 -- முல்லை பூத்த தம்மா! - இருவாட்சி மொட்ட விழ்ந்த தம்மா! மல்லி கைப்பூவும் - மலர்ந்துநல் வாசம் வீசுதம்மா! (459) இதில் நல் வாசம்' என்பது நாற்றப் புலப்படிமம். நொப்புலப் படிவமங்கள்: தொடுவதால் அநுபவிக்கக் கூடிய படிமங்கள் இவை. இவை கவிமணியின் பாடல்க ளில் மிக அரியவை. பொன்றுத லிலாதநிலை தரவல்ல உன்கரப் புனித முடல் தீண்டலாலே (5) இஃது அஞ்சலி யில் வருவது. உடல் தீண்டல்' என்பது நொப்புலப் படிமம். முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி (268) இது பசுவும் கன்றும் என்பதில் வருவது. முத்தம் 'முட்டிக் குடித்தல்' என்பவை நொப்புலப் படிமங்கள். இயக்கப்புலப் படிமங்கள்: ஒரு பொருள் அல்லது ஒரு மனிதனின் இயக்கத்தை விளக்குவன இந்நிலைப் படிமங் கள். பாலாறு பொங்கிப் பாறைகளும் உடைந்துருளப் பாய்ந்தொழுகும் (8) இஃது அஞ்சலி'யில் வருவது. இதில் உடைந்து உருளு தல் பாய்ந்து ஒழுகுதல் இயக்கப்புலப் படிமங்கள். தையலார் மீதிலே மையலாய் ஓயாது சண்டாள நெறியி லெல்லாம் சாடிக் குதித்தோடி அலைகின்றமனம் (31)