பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணி - ஓர் அறிமுகம் + 11 卡 நூல்களையெல்லாம் இந்நிலையத்திற்கு அன்பளிப்ப க அளித்துள்ளார்கள் (சூலை, 1953). (4) புத்தேரியில் கவிமணி இறுதியாக இருந்து அமைதி யுடன் வாழ்ந்து மறைந்த இடத்தில் அவர் மருகர் கவிமணி இல்லம் எனப் பெரிய அழகிய மாளிகை அமைத்துள்ளனர். இம்மாளிகையில் கவிமணி அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டும் பல உருவப் படங்களும், பிற சின்னங்க ளும் அமைந்துள்ளன. இது கவிமணி அவர்களை நினைவு கூரும் வகையில் சிறந்ததொரு நிலையமாகத் திகழ்கின்றது (நவம்பர் 21, 1955).