பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடலில் படிமங்கள் → 257 + இப்பாடலில் பல படிமங்கள் பாங்குற அமைந்து பாட லுக்கு மெருகூட்டுகின்றன. கவிதையநுபவம்: நம் உடல் தூண்டல் - துலங்கள் (Simau. ius - response) என்ற உளவியல் தத்துவப்படி இயங்குகின் றது. வெளி உலகிலிருந்து தூண்டல்கள் நம்புலன்களைத் தாக்கும்போது (sensory level) அவற்றிற்கேற்பப் புலன்கள் துலங்குகின்றன. அதாவது, அப்புலன்கள் அத்துண்டல் களால் கிளர்ச்சியடைகின்றன. அதனால் ஏற்படும் உணர்ச் சியை மனம் அதுபவிக்கின்றது. இந்த உணர்ச்சிப் பெருக் கில் உண்டாகும் இன்பமே - முருகுணர்ச்சியே - சுவையா கும். எடுத்துக்காட்டாக மணப் பொருள்கள் நல்கும் மணத்தை நாற்றப்புல நரம்புகள் வாங்கி மூளைக்கு அனுப் புகின்றன. மனம் அப்பொருள்கள் நல்கும் மணத்தை அநுபவிக்கின்றது. ஊதுவத்தி, சாம்பிராணி மணம் செயற்ப டுவதைக் கருதலாம். மல்லிகை, மருக்கொழுந்து, உரோஜா முதலியவை தரும் மணங்களிலிருந்து, அவை இன்னவை என்று மனம் வேறுபடுத்தி அறிகின்றது. இங்ங்னமே பிற புலன்களின் மூலம் பெறும் தூண்டல்களால் மனம் அந்தந்தப் பொருள்கள் தரும் சுவைகளைப் பெற்று அவற் றில் ஈடுபடுகின்றது. இவ்வாறு வெளியுலகத் தூண்டல்க ளால் அடிக்கடி மனம் பெறும் அநுபவம் பெருமூளையில் பதிவாகி விடுகின்றது. உலகை இன்பமயமாகக் கண்டு உள்ளத்தில் பூரிப்பு அடைபவர்களே கவிஞர்கள். கவிமணி இயல்பாகவே கவிஞராதலால் இந்த அநுபவத்தைப் பெறு பவராகின்றார். இவ்வாறு பெருமூளையில் பதிவாகியிருக்கும் அதுப வம் அச்சு வடிவிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது கவி-18