பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாரதியின் பரம்ப ரையைச் சேர்ந்தவர். நடை, கற்பனை, சந்தம் முதலிய அம்சங்களில் பாரதியைப் பின்பற்றினவர்; கவிதைப் போக் கிலும் பாவனையிலும் பாரதியை முன் மாதிரியாகக் கொண்டவர். கவிமணியின் படைப்புகள் அவரை ஒரு ‘சிறந்த தற்காலக் கவிஞர் என்பதற்குச் சான்றுகளாக அமை கின்றன. தமிழ்ப் பண்பாட்டினை உணர்த்தும் கவிமணியின் அரிய கவிதைகளில் தமிழ் மக்கள் பெரிதும் ஈடுபட்டனர். தமிழகமெங்கும் இவர்தம் புகழ்மணம் பரந்து கமழ்ந்தது. முதல் கட்டுரையில் குறிப்பிட்ட பல விருதுகளை இவர் பெற்றமையே இதற்குப் பெருஞ்சான்றுகளாக அமைந்துள் ளன என்பதைக் காண முடிகின்றது. இவர்தம் கவிபாடும் திறமையைப் போலவே, அருங்குணங்களாலும் இவர் சிறந்து விளங்கினார் என்பதைத் தமிழ் கூறு நல்லுலகம் நன்கு உணர்ந்தது. இக்காலத்தில் அண்மையில் சிவப்பேறு அடைந்த வாரியார் சுவாமிகளிடம் வாழ்த்துப் பாடல்களை மக்கள் பெற்று வந்ததைப் போலவே அக்காலத்தில் இவரி டம் வாழ்த்துப பாடல்களை ஆசிச் செய்திகளாகப் பெறுவ தற்கு பலரும் விரும்பினர்; இதன் பயனாக பல வாழ்த்துப பாடல்கள் சரம கவிகள், பாராட்டுப் பாடல்கள் ஆகியவை வெளிவந்தன. இவற்றால் மக்கள் பெருமகிழ்ச்சி எய்தினர். இவ்வகைப் பாடல்கள் ஒரு சிலவே அச்சு வடிவம் பெற் றுள்ளன. எட்டயபுரத்தில் பாரதி மண்டபம் திறக்கப பெற்றபொழுது இவர் பாடிய கவிதைகள் இங்கு குறிப்பி டத்தக்கனவாகும். இவற்றுள் சில இந்நூலில் ஆங்காங்கு எடுத்து காட்டப் பெற்றுள்ளன.