பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு 흥~ 26 -, '5 3. என்று வரையறுத்துள்ளார். இதில் யாக்கைக்கும் கவிதைக் கும் ஒப்புமை கூறப் பெற்றுள்ளது. தோல், குருதி, தசை, எலும்பு முதலிய தாதுக்களினால் ஆன உடல் உயிருக்கு இடனாக, கல்வியறிவில்மிக்க வல்லோரால் அணிபெறச் செய்யப் பெறுவதே கவிதையாகும். நம் கவிமணியவர் களும, உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெ டுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெளிந்து ரைப்பது கவிதை' என்று கவிதைக்கு இலக்கணம் கூறுவார். இங்ங்னம் கூறியுள்ள மேற்புல அறிஞர்களின் கூற்றுக விலும் நம் நாட்டு அறிஞர்களின் கூற்றுகளிலும் கவிதை யின் முழு வடிவம் தோன்றவில்லை. 'கவிதையின் உருவம் திருமலை நாயக்கர் மகால் துணைப் போல் தூலமாகத் தெரிவதில்லை என்று புதுக்கவிதையைப் பற்றி மீரா கூறுவது பொருத்தமாகத் தோன்றுகின்றது." ஏதோ இன் னும் நாம் காணாத பல கூறுகள் கவிதையினுள் உள்ளன என்றே நம் மனம் எண்ணத் தோன்றுகின்றது. உயிருள்ள, வளரும் இயல்புடைய கவிதையைச் சொற்கோட்டைக்குள் வளைத்துக் கிட்டியில் மாட்டி விடலாம்" என்று நினைப் பது தவறு; அஃது இயலாததொன்று. அது மேலிருந்து 3. ம.ம. கவிதை - 7 4. மீரா: 'புதுக்கவிதையின் உருவம்' 5. சுப்புரெட்டியார்: கவிதையநுபவம் (கழகம் - 1981) பக்.135