பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 264 卡 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு திற்காகவே எழுதப் பெற்றுள்ளன என்றும் அது காரணம் பற்றி இலக்கியச் சுவையிலும் கவிதைச் சுவையிலும் சிறு குறைவுற்றனவாகச் சிலர் கருதுவர். இக்கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளார். 'பொங்கல் திருநாள் தீபாவளிப் பண் டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை கள். பெண்கள் உரிமைகள்' என்ற பாடல்களில் பெண்க ளின் தியாக உணர்வு அற்புதமாகச் சித்திரிக்கப் பெறுகின் றது. எடுத்துக்காட்டுகளாக, அல்லும் பகலும் உழைப்பவ ரார்? - உள்ளத்து அன்பு ததும்பி எழுபவ ரார்? கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ கற்பனை வேண்டித் தொழுப வரார்? (2) உள்ளம் தளர்வுறும் நேரத்திலே - உயிர் ஊட்டும் உரைகள் உரைப்பவர் யார்? அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள் அன்பைப் பெருக்கி வளர்ப்பவர்.ஆர்! (5) மண்ணை வாழ்வினை விட்டெழுந்து - மனம் மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம் வேண்டிய போதனை செய்பவர்.ஆர்: (10) அன்பினுக் காகவே வாழ்பவர்.ஆர்? - அன்பின் ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்? இன்ப உரைகள் தருபவர்.ஆர் - வீட்டை இன்னகை யாயொளி செய்பவர்.ஆர்? (11) இவற்றைப் பிரசாரக் கவிதைகள் என்று திருநாமம் சூட்ட முடியுமா இங்கனமே உடல் நலம் பேனல்', 'சுகாதாரக் 7. ம.ம. சமூகம் - பெண்களின் உரிமைகள் - பக்.148