பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு + 265 + கும்மி", "நாட்டுக்கே உழைப்போம் என்ற தலைப்புகளில் உள்ள பாடல்களை பிரசாரக் கவிதைகள்' என்று குறைத்து மதிப்பிடல் அறிவுடைமை அன்று; இது சுவைப்பண்பு இல்லாதவர் செயல் என்று தள்ளத்தக்கது. கவிமணியின் தமிழ்: இவரது தமிழைக் குறித்துச் சில சொற்கள். இதுகாறும் மேற்கூறிய கவிதைகளால் நாம் அறிந்தது இது. இவருடைய தமிழ் என்றும் உள்ளத்தில் போற்றி வைக்கத்தகும் பொற்களஞ்சியம். நமது மூதாதை யரின் பண்பாட்டிலும் மரபிலும் ஊறித் தோய்ந்து இனிமை முற்றிய தமிழ்; உண்மை நிரம்பிய தமிழ், கல்லார்க்கும் கற்றார்க்கும்; நாட்டார்க்கும் நகரத்தார்க்கும் ஒன்றுபோல் நலம் அளிக்கும் தமிழ். கானார்க்கும் கண்டார்க்கும் கண் னளிக்கும் தமிழ். இந்த இயல்புடைய தமிழ் நம் நாட்டில் அரிதாகிக் கொண்டு வருகின்றது. இழக்க முடியாத இத்த அரிய செல்வத்தை நமக்குப் போற்றி அளித்தவர் நம் கவிமணி அவர்களே. ஆய்வாளர்கள் அனைவரும் உண்மைக் கவிதை பற் றிய ஒரு விஷயத்தில் ஒன்றிய உள்ளத்தினராய் உள்ளனர். சிறந்த உண்மையான உயர் கவிதையைப் படித்த அளவி லேயே நம் மனத்தில் விவரிக்க முடியாத ஓர் இன்பத்தைக் காண முடிகின்றது. நாமக்கல் கவிஞர் கூறுவார்: புவியணி கவிகள் பாடும் புலமையைப் போற்று கேனோ? செவிமகிழ் இனிய சொல்லின் செறிவினை மெச்சு கேனோ?