பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு - 267 -- என்று மொழிந்து மகிழ்கின்றார். இதே பாணியில் கவி மணியின் பாடல்களைத் திறனாய்ந்து பேசுகின்றார். அப் பேச்சில் சில கவிதைகள்: இவருடைய பாடல்களில், கோழி குலவிவரும்; கிளி கொஞ்சும்; குழந்தை எழுந்து துள்ளிக் களிமிஞ்சும்: ஏழை எளியவர்கள் யாவருக்கும் இன்பம் கொடுக்க அவன்பா விருக்கும் (2) காடும் மலையும்.அதில் கலைபேசும் கடலும் ஞானம்தர அலைவீசும்; பாடும் தேசிகவி நாயகத்தின் பழமை பாட்டிடஎன் நாஉவக்கும் (3) படித்துப் பழகாத பாமர ருக்கும் பாடிப் பருக அதில் சேம மிருக்கும்; ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திக ளில்லை; ஊன்றிப் பதம்கூட்டும் பந்தன மில்லை {4} என்பவற்றைக் காணலாம். இன்னும், அவர் பாட்டு, உழுது தொழில்புரியும் பாட்டாளி உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும் (3) என்பார் நாமக்கல்லார். இங்ங்ணம் பல்லோர் பாராட்டும் அவர் கவிதைகளில் உள்ளம் பறிகொடுத்த நம் மனமும் கவிமணி தற்காலக் கவிஞர்களில் தலைசிறந்தவர் என்று மதிப்பிடும்; அறுதியிட்டு மகிழும்.