பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை - சிறுவர் இலக்கியம் + 23 + காக்காய் பற்றியவை: காக்காய்! காக்காய்! பறந்துவா; கண்ணுக்கு மை கொண்டுவா, (1) கோழி! கோழி கூவிவா; குழந்தைக்குப் பூகொண்டுவா, (2) வெள்ளைப் பகவே விரைந்துவா; பிள்ளைக்குப் பால்கொண்டுவா! (3) * இப்பாடல்களை குழந்தைகளைப் பாடச் சொன்னால் நன் றாகவும் உற்சாகமாகவும் பாடுவார்கள். கோழியைப் பற்றியவை: சேவற் கோழி, பெட்டைக் கோழி இவை பற்றித் தனித்தனியே பாடல்கள் உள்ளன." கோழி கோழி வாவா! கொக்கோ கோஎன்றுவா, கோழி ஓடி வாவா; கொண்டைப் பூவைக் காட்டுவா (1) குத்திச் சண்டை செய்யவோ? குப்பைக் கிண்டி மேயவோ? கத்தி போலுன் கால்விரல் கடவுள் தந்து விட்டனர்! (2) காலை கூவி எங்களைக் கட்டில் விட்டெ ழுப்புவாய்; வேலை செய்ய ஏவுவாய்! வெற்றி கொண்ட கோழியே! (3) 10. மழலை மொழி காக்காய் 11. மேலது மேலது கோழி.