பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை சிறுவர் இலக்கியம் +,25 + பச்சைக் கிளியே வாவா; பாலும் சோறும் உண்ணவா, கொச்சி மஞ்சள் பூசவா! கொஞ்சிவிளை ஆட வ: (1) கவலை யெல்லாம் நீங்கவே, களிப்பெழுந்து பொங்கவே பவழ வாய் திறந்துநீ பாடுவாயோ தத்தம்மா! (2) வட்ட மாயுன் கழுத்திலே வான வில்லை ஆரம்மா இட்ட மன்னர் யாரம்மா? யான் அறியக் கூறம்மா! (3) பையப் பையப் பறந்துவா பாடிப் பாடிக் களித்துவா கையில்வந் திருக்க வா கனியருந்த ஓடிவா (4) ஆசிரியை(யர்) தக்க பயிற்சியளித்தால் இப்பாடல்அற் புதமாகப் பாடி மகிழ்வார்ரகள் சிறுவர் சிறுமியர். கூண்டுக்கிளி பற்றி" உள்ள பாடல்கள் சிறுவனும் கிளியும் உரையாடும் பாங்கில் அமைந்துள்ளன. சிறுவன் கிளியை நோக்கி வினவுகின்றான்: பாலைக் கொண்டு தருகின்றேன், பழமும் தின்னத் தருகின்றேன்; சோலைக் கோடிப் போகவழி சுற்றிப் பார்ப்ப தேன்கிளியே! (1) 13. மேலது - கூண்டுக் கிளி