பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 28 - கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு முறை, பெண்ணின் தோழியர் யாவரும் பெண்ணின் வெற் தியைக் கைகொட்டிச் சிரித்து மகிழ்வார்கள். மாப்பிள்ளை முகத்தில் அசடு வழியும். இன்னும் இந்தப் பகுதியில் பொம்மைக் கலியாணம், எலிக் கலியாணம், புலிக்கூடு, பசு, பால், காலைப் பாட்டு என்ற தலைப்புகளில் பல குழந்தைப் பாடல்கள் உள்ளன. அவை யாவும் சிறுவர்கள் விளையாட்டுக்கும் வாய் மொழிப் பயிற்சிக்கும் ஏற்றவையாகும். காட்சி இன்பம் என்ற பகுதியில் உள்ள கடிகாரம்', 'சைக்கிள்", ஆகாய விமானம்' பேன்ற பாடல்கள் குழந்தைகள் ஆர்வமாய் படிக்கத் துண்டுபவை. "கதைப் பாட்டு என்ற தலைப்பில் உள்ள கனகமுள்ள காகம்’, ‘நெற்பானையும எலியும் , அப்பம் திருடின எலி, ஒளவையும் இடைச் சிறுவனும்: என்ற கதைப் பாடல்கள் சிறுவர்கள் சுவைத்துக் களித்துப் படிக்கத் தக்கவை; பாடி மகிழத்தக்கவை. இவை தவிர, உள்ளமும் உணர்வும் என்ற பகுதியில் உள்ள பல பாடல்களைச் சிறந்த குழந்தை இலக்கியமாகக் கருதலாம். குழந்தை' என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் தாயும் சேயும் உரையாடும் பாணியில் அமைந்துள்னள. எங்கே இருந்து வந்தாய்? குழந்தாய் - அதை யானும் அறிந்திடச் சொல், குழந்தாய்! எங்கும் நிறைவெளியில் இருந்தேன் - சற்றே இங்கும் இருக்க வந்தேன், அம்மா! (1) கண்ணில் ஒளிவிளங்கக் கண்டேன் - அந்தக் காட்சியின் காரணம்என்? குழந்தாய்! விண்மீன் ஒளிசிறிது தங்கி - அங்கு மின்னி விளங்குகின்ற தம்மா! (3) மனமிக மகிழ்ந்திடக் குழந்தாய் - நீயென் மடியில் வந்தவகை எதுவோ?