பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை - சிறுவர் இலக்கியம் + 29 + தினமும்நீ செய்தபெருந் தவத்தால் - அந்தத் திருவருள் கூட்டிவைத்த தம்மா! (12) இத்தலைப்பிலுள்ள பன்னிரண்டு பாடல்கள் படித்து அநுப விக்கத் தக்கவை. ‘முதல் துயரம் என்ற தலைப்பில் உள்ள கவிதைகள் உள்ளத்தை உருக்குபவை. 'பிள்ளை' கூறு வனவாக உள்ளவை: தும்பி பாடுதம்மா! - கிளிபயில் சோலை தேடு தம்மா! தம்பி எங்கே? அம்மா! - விளையாடத் தனியே நின்றேன், அம்மா! (2) சின்னஞ் சிறுபிஞ்சு - வெள்ளரியில் செழித்தி ருக்கு தம்மா! கன்னிக் காய்பறிக்கத் - தம்பியையும் காணோமே, அம்மா! (4) புனைந்த சித்திரம்போல் - வண்ணத்துப் பூச்சி சுற்று தம்மா! துணைவன் இல்லாமல் - யானும் அதைத் தொடர்ந்து செல்லேன், அம்மா! (6) தாய் கூறுவனவாக அமைந்தவை: யார் அழைத்தாலும் - அவன்செவிக்கு எட்ட மாட்டாதே; பாரில் நம்மை அவன் - இனிவந்து பார்க்க மாட்டானே. (8) வாச மலரைப்போல் - வளர்ந்தவன் வாடி விட்டானே; ஈசன் சந்நிதியில் - விளையாடி இருக்கின் றான்.அப்பா! (9)