பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை - சிறுவர் இலக்கியம் -- 31 -- தைக் கல்வியில் அதிகக் கவனம் செலுத்திச் சில முறைக ளையும் வகுத்துக் காட்டியுள்ளனர். ரூசோவின் 'எமிலி' என்ற நூல்தான் புதிய முறைகளின் வித்து எனலாம். ரூசோவின் கல்வி பற்றிய கருத்துகள் தெளிவாக அதில் காணப் பெறுகின்றன. கல்வி கற்பிப்பதில் குழந்தைதான் முக்கிய கூறு, மனிதனின் பண்பாடல்ல என்பது ரூசோ வின் கருத்து. அதாவது குழந்தையை மையமாக வைத்துக் கல்வி புகட்ட வேண்டுமேயன்றி பாடப் பொருளை வலிந்து புகுத்தக் கூடாது என்பது இதன் கருத்தாகும். இதனால் ரூசோவைக் கல்வி முறையின் காபர்னிகஸ் என்று கூறுகின்றனர். பூமியை நடுவாக வைத்துதான் ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற பழைய கொள்கையை காபர்னிகஸ் மறுத்துக் கதிரவனையே மையமாகக் கொண்டு ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற உண் மையை உலகிற்கு உணர்த்தியது போலவே, அதுகாறும் கல்வித் திட்டத்தினை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெற்ற முறையைத் தவறு எனக் கண்டித்து, குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெறவேண்டும் என்று கூறினார் ரூசோ. 'குழந்தையை நன்றாக ஆராய்க; குழந்தையை ஆராய்வது எளிதல்ல; குழந்தையைக் கவனி; இயற்கை யோடு இசைந்து நட என்பவை ரூசோ கல்வித் துறையில் பணியாற்றுவோருக்கு வழங்கிய தாரக மந்திரங்கள். அவர் தந்த மந்திரங்கள் உளவியல் உண்மைகளை ஒட்டியும் உள்ளன. அன்றியும் அவர் புலன்கள் வாயிலாகத்தான் கற்பிக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினார். புத்தக வாயிலாகப் புகட்டும் கல்வியை அந்த அறிஞர் ஆதரிக்க வில்லை. ஸ்விட்ஸர்லாந்து நாட்டு அறிஞர் பெஸ்டலாஸ்ஸி என் பார் ரூசோவின் கொள்கையை வகுப்பறையில் நடை முறைப்படுத்தினார். அவர் குழந்தையை ஒரு விதையாகக்