பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 36 -j- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு குறைந்து கொண்டே வந்தது. எங்குப் பார்த்தாலும் பஞ்ச மும் பட்டினியும் தான் தலைவிரித்தாடத் தொடங்கின. இத்த திலையில் அரசுக்கு எதிராகக் கருத்துகளை எவரே னும் வெளியிட்டாலும் அவர்கட்கு வாய்ப்பூட்டு போடப் பெற்றது. எங்கேனும் வெளிப்படையாக அரசின் அடாத செயல்களைக் கண்டித்தால், குண்டுகட்கு அவர்கள் இரை யாக வேண்டியதுதான். அடக்குமுறை இவ்வாறாக வன் மையுடனும் உறுதியுடனும் மேற்கொள்ளப் பெற்றது. உணவு முறைகளிலும் பிறவற்றிலும் ஒவ்வாத வழி களை கொண்டால் உடல் நலத்தில் கேடுகள் தலை துக்குவது போல, அரசின் கொடுங்கோன்மை நாட்டு மக்களிடம் விடுதலை உணர்வு தோன்றத் தொடங்கி விட் டது. இந்த உணர்வு மக்களிடையே தீவிரமாகப் பரவியது. பலவிதமான அடக்குமுறைகளை அரசு கையாண்ட போதி லும் இந்த விடுதலை வேட்கையைத் தடுக்க முடிய வில்லை. தாடு முழுவதும் இந்த வேட்கையுணர்வு அலை அலையாகப் பரவியது. இந்த உணர்ச்சியை ஒருவாறாக தெறிப்படுத்தி நாட்டிற்கு நன்மை புரிய வேண்டும் என்ற கருத்துடன் உழைத்து வந்தவர்கள் காங்கிரசுக் கட்சியினர். இந்தக் கட்சியினரும் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இருவகையாகப் பிரிந்து செயற்பட்டனர். முன்னவர் அரசுடன் இணைந்து ஒத்துழைத்து சட்டத்தின் நடைமுறை கட்கு உட்பட்டுத் தமது குறிக்கோள்களை வெற்றியுடன் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையுடையவர் கள். பின்னவர் அன்னிய அரசுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அதற்காக சட்டங் களை மீறிய வழியையும் மேற்கொள்ளலாம் என்னும் கருத்துடையவர்கள். பின்னவர்களின் கட்சியைச் சேர்ந்த வர் பாரதியார். புதுமைக் கவி பாரதியாரின் கவிதைகளில் தீவிர தேசபக்திக் கனல் நிரம்பிப் பரிமளிக்கின்றன. அடக்கு