பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 38 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்று கூறி தமது நாட்டுப் பற்றைக் குறிப்பிடுவர். பாஞ் சாலி சபதத்தில் விதுரன் தூது செல்லும்போது வழியி டையே நாட்டினுறு வளங்கள் நோக்கி தன் இதயத்துள்ளே பல மொழிகள் கூறும்போது, வீசமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி வேள்விஎனும் இவையெல்லாம். விளங்கும் நாடு; சேரமுதற் புன்மையெதும் தோன்றா நாடு தொல்லுலகில் முடிமணிபோல் தோன்றும் நாடு பாரதர்தந் நாட்டினிலே நாசம் எய்தப் பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே!" என்று அவன் நாட்டின்மீது தான் கொண்ட பற்றினைப் புலப்படுத்துவார். நாட்டைப் பணயமாக வைத்து தருமன் சூதாட நினைக்கும்போது விதுரன் கூறுவான்: ஐய கோ.இதை யாதெனச் சொல்வோம்? அரச ரானவர் செய்குவ தொன்றோ மெய்ய தாகவோர் மண்டலத் தாட்சி வென்று சூதினி லாதல் கருத்தோ? வைய மிஃது பொறுத்திடு மோ?மேல் வான்பொறுத் திடுமோ? பழிமக்காள்! துய்ய சீர்த்தி மதிக்குல மோ?நாம் துவென் றெள்ளி விதுரனும் சொல்வான்" இதிலும் தேசபக்தி சுடர்விட்டு ஒளிர்வதைக் காணலாம். நாட்டின்மீது பாடிய பாடல்களில் மட்டிலுந்தான் இவர்தம் நாட்டுப் பற்றும் விடுதலை உணர்வும் விளங்கு கின்றன என்று நினைத்தல் தவறு. இவர் எழுதுகோலில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு சொற்றொ 5. பச.ச. அழைப்புச் சருக்கம் - 118 5. மேலது - சூதாட்டச் சருக்கம் - 196