பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் + 39 + டரும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு பாடல் தொகுதி யும், ஒவ்வொரு நூலும் நாட்டுப் பற்றை உயிர்த்துக் கொண்டுள்ளன. சுருங்கக் கூறின் தேசபக்தியே இவர்தம் பாடலின் உயிர் நாடியாகத் திகழ்கின்றது எனலாம். சிற்றரசு நாடுகளில் வெள்ளையர் நேர்முகமாக ஆட்சி புரிந்த நாட்டுப் பகுதியில் நாட்டுப் பற்றை வளர்த்து வந்த அரசியற் கிளர்ச்சி தன்னாட்சி முறையில் இயங்கி வந்த சிற்றரசு நாடுகளில் பெரும்பாலும் இல்லை. அங்குள்ள மன்னர்கள் வழிவழியாக நீண்ட காலமாக நல்லாட்சி புரிந்து வந்தவர்ளாதலின் அவர்கள் நாட்டுக் குடிமக்கள் அவர்கள்மீது பேரன்பு கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். இதனைக் கவிமணியின், நாட்டின் நலமே நமதுநலம் என்றுள்ளந் தீட்டும் பெருமான் எம்சித்திரைமன் - கூட்டும் குடியரசின் மன்னவர்செங் கோலரசை மெச்சும் படியரசு செய்க பரிந்து (8) நாட்டுக் கணியாகி நன்மைக்கு வித்தாகிப் பாட்டுக் கினிய பயனாகி - ஊட்டிநிதம் குஞ்சணைக்கும் தாய்போல் குடியனைக்கும் சித்திரைமன் வஞ்சிநிலம் வாழ்க மகிழ்ந்து (12) என்பன போன்ற பாடல்களால் தெளியலாம்." அக்காலத்தில் சிற்றரசர்களின் ஆட்சியில் காங்கிரசின் முயற்சிகள் தலைகாட்டுவதற்கு வாய்ப்புகளே இல்லை. எந்தவிதமான அரசியற் கிளர்ச்சிகளுமின்றி அமைதியாக இந்த ஆட்சிகள் நடைபெற்று வந்தன. இக்காலத்தில் ஆங்கிலப் பிரதிநிதிகள் ஒவ்வொரு சிற்றரசு நாடுகளிலும் 7. ம.மா. வாழ்த்து - சித்திரை மன்னர் முடிசூட்டு விழா