பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 42 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இதில் கவிஞரின் நாட்டுப் பற்றோடு சமூக மூடப்பழக்கங் கள் முதலியவையும் காட்டப் பெறுகின்றன. பாடல்களின் சிறப்பு: பாரதியாரின் 'தாயின் மணிக்கொடி பாரீர்!" என்ற பாடல் ஆனந்தக் களிப்பு மெட்டில் உணர்வு கொப்புனிக்கும் முறையில் அற்புதமாக அமைந்திருப்பது போல கவிமணியின் தேசக் கொடி’ப் பாடல் அமைந்திரா விடினும், பாடலின் சிறப்பிற்கும் வளமான கருத்திற்கும் குறைவில்லை. வீரர் துணிந்தேறி தட்டகொடி - இது வெற்றி விருத எடுத்த கொடி, யாரும் இறைஞ்சி வணங்கும் கொடி என்று சுதந்திரம் ஈட்டும் கொடி (3) கங்கை யினும்புனித மானகொடி - கோடிக் கதரின் இனியமணம் கமழும் கொடி மங்கையர் நோன்பிருந்து நெய்தகொடி - அவர் வாழ்வு தழையவந்த மங்கலக் கொடி (4) மின்னல் இடிக்கும் அஞ்சாதுயருங் கொடி - விண்ணில் வீரர் திலகர்தொழும் விருதுக் கொடி: தன்னை மிதித்தெறிந்த சூர்களெல்லாம் - இன்று தாழ்ந்து தலைவனங்கக் காணும் கொடி (5) கலியுகக் கண்ணன் கருணாகரன் - அந்தக் காந்தி மகான்வாழ்த்தி யெடுத்த கொடி, புலியொடு பசுவும்சென் றோர்துறையில் - மனம் பொருந்திநீர் அருந்திடச் செய்யும் கொடி (7) காணாப் புதுமைகளைக் காட்டும் கொடி - தொண்டர் கனவையும் நனவாக மாற்றும் கொடி, வாணாளின் இன்பமெலாம் வழங்கும் கொடி - நாட்டின் வளத்தை வளர்க்கவந்த மந்திரக்கொடி (8) 9. பா.க. தே.கீ. தாயின் மணிக்கொடி