பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியப் பாடல்கள் + 47 + ‘புஞ்சிரிப்பில், கைகுலுக்கில்' புத்திமிக மயங்கிடுமோ? நெஞ்சிருப்பை நம்மவரும் நிறைவேற்றி வருவாரோ? (10) மாதரசி சரோசினியார் வாக்குநயம் பலித்திடுமோ? மூதறிஞர் மாளவியா முயன்றதவம் முற்றிடுமோ? (12) சீக்கிரமாய்க் காந்திமகான் செயக்கொடியும் கட்டுவரோ? ஊக்கமுடன் இந்தியரும் உளமகிழ்ந்து வாழ்வாரோ? (13) என்ற பாடல்கள் மாநாட்டின் முடிவை எதிர்பார்ப்பனவாய் அமைந்துள்ளன. குறத்தி குறி சொல்லும் பாங்கில் அமைந் தது மிகப் பொருத்தம். இம்மாநாடு நடைபெற்றபோது பாரதியார் இல்லை; கவிமணி இருந்தார்; பாடி மகிழ்ந்தார். சுதந்திரம்: பாரதியார் தீவிரவாதிகளின் வகுப்பைச் சேர்ந்தவர். விடுதலை பெறுவதே முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தவர். ஆகவே, அவர் வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? ' என்று பாடினார். மேலும், என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும்.எங்கள் அடிமையின் மோகம்?" 15. பா.க. தே.கீ. சுதந்திரப் பெருமை - 1 18. மேலது - மேலது - சுதந்திர தாகம் - 1