பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தெய்வத்தமிழ் 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். என்பது தம் நாட்டில் வழங்கிவரும் ஒரு பழமொழி: ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு முதுமொழி. மத்தளி டையே இறைவழிபாட்டை நினைவுறுத்திக் தொண்டே இருக்கும் ஓர் ஆற்றல் நிலையம் (Power House), நாவுக்கரசரும் இதுபற்றி ஒரு தேவாரம் பாடியுள்ளார். திருக்கோயில் இல்லாத திருவி லூரும் திருவெண்ணி அணியாத திருவி லூரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஆரும் பாங்கினொடு பலதலங்கள் இல்லா ஆரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா ஆரும் விதானமும் வெண்கொடியும் இல்லா ஆரும் அருப்போடு மலர்பறித்திட்டு உண்ணா ஒரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே" என்ற திருப்பாடலில் கோயில் ஒர் ஊரில் வானொலி நிலையம் போல, ஒரு தொலைக்காட்சி நிலையம் போல பல தெய்வச் செயல்கட்கு இருப்பிடம் போல் இயங்குவ தைக் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம். வைணவத்தில் ஒரு திவ்விய தேசம் வைணவ தத்துவங்களின் நிலைக்கள மாகத் திகழ்கின்றது என்பர். அவ்வூரிலுள்ள நல்லார் சித்து; ஆறு, குளம், சோலை முதலியன அடங்கியுள்ள இயற்கைச் சூழ்நிலை அசித்து: எம்பெருமான் எழுந்தருளியுள்ள இடம் ஈசுவரன் என்பவற்றை நினைவுறுத்தும் நிலையமாக இருப் பதாகக கூறுவா. நம் கவிமணியும் கோயில் வழிபாடு பற்றி எட்டுப் பாடல்கள் பாடியுள்ளார். 1. அப்பர் தேவாரம் - 8.95:5 2. ம.ம. பக்திமஞ்சரி - கோயில் வழிபாடு