பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 51 용 கோவில் முழுதுங் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன் தேவாதி தேவனையான் - தோழி! தேடியும் கண்டிலனே (1) இதனையொட்டி தெப்பகுளம், தேரோடும் வீதி, சிற்பச் சிலை, சித்திர வேலை, பொன்னும் மணியும், பூமாலை, தூபமிடுதல், தீபம் சுற்றுதல், தில்லைப் பதி, சிற்றம்பலம் முதலியவற்றைக் கண்டதாகக் கூறி எய்ப்பினில் வைப்பாம் இறைவனைத் தான் காணவில்லை என்பார். காணாமைக் குரிய காரணத்தையும், அவனைக் காணும் முறையையும் விளக்குவார். கண்ணுக் கினியன கண்டு - மனத்தைக் காட்டில் அலைய விட்டு, பண்ணிடும் பூசையாலே - தோழி! பயனொன் றில்லை,அடி! (7) உள்ளத்தில் உள்ளான்.அடி - அதுநீ உணர வேண்டும், அடி! உள்ளத்தில் காண்பாய்எனில் - கோயில் உள்ளேயும் காண்பாய்,அடி! (8) என்ற பாடல்களில் இவற்றின் விளக்கத்தைக் காணலாம். இவ்விடத்தில், உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே." 3. அப்பர் தேவாரம் - 4,75:4