பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (பேராசிரியர் முனைவர் இராதா செல்லப்பன்) பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழறிஞர். நூறு நூல்களுக்கு மேல் படைத்து உலவ விட்ட பெருமைக்குரியவர். அவர் தொடாத துறைகள் இல்லை. பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்டு தமிழ் ஆய்வு வளர்ச்சியில் தம்முடைய முத்திரையை நன்கு பதித்த பேரறி ஞர். தம்முடைய 87ஆவது அகவையிலும் ஓயாது உழைததுது தமிழன்னைக்குப் பல்வேறு நூல்களைக் காணிக்கையாக்கி உள்ளார். அவருடைய படைப்புச் சாதனையில் இப்பொழுது முகிழ்ந்துள்ளது'கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ' என்னும் நூல். கலை வேறு அறிவியல் வேறு என்ற கருத்து மாறி இரண்டும் ஒன்றாகக் கை கோர்த்து நடக்கும் காலமிது. திறனாளிகள் அறிவியல் ணுகுமுறைகளைக் கொண்டு இலக்கி யத்தை ஆராய்வர். இலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும் அதன் போக்கும் சில பொதுவான கொள்கைகளுக்கு உட்பட் டவை. அப் பொது .ண்மைகளை அறியும் ஆர்வம் கிளர்ந்தெ ழுந்ததன் விளைவே இந்நூல். இந்நூலின்கண் ஆசிரியர் கவிமணி பல்வேறு கால கட்டங்களிலும் எழுதிய பாக்களைத் தொகுத்துப் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தி ஆராய்ந்து தந்துள்ளார் நூலாசிரியர், கவிமணி காட்டும் இயற்கைக் காட்சிகளையும் படிமக் காட்சிகளையும் வரலாற் றுப் போக்கிலும் ஒப்பீட்டு முறையிலும் தமக்கே உரித்தான முறையில் திறனாய்ந்துள்ளார் பேராசிரியர். கவிஞரின் குழந்தைப் பாடல்களை நுணுகி ஆராய்ந்து கருத்தளிக்கிறார் பேராசிரியர். ரூசோவின் எமிலி என்ற நூல்தான் புதிய கல்வி முறைகளுக்கான வித்து என்று கூறும் அவர் பெஸ்டலாஸ்ஸி, ஃபிராபெல் முதலான மேனாட்டறிஞர் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழியல் துறை. பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர், திருச்சிராப்பள்ளி - 620 024. (தொ.பே.0431 - 660358)