பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் -j- 55 + கவிமணியை இரட்டைப் பிணிபோல் பீடித்திருந் தவை ஆஸ்துமாவும் எக்ஸிமாவும். எக்ஸிமா நோய் சதா சொரிந்து கொண்டிருக்கும் நிலையை உண்டாக்கும். முரு கன்மீது சிரங்கு பற்றி நகைச்சுவையாக நான்கு பாடல்க ளைப் பாடியுள்ளார். இந்த தான்கும் சுவை மிக்கவையாத லின் ஈண்டுத் தரப் பெறுகின்றன." செந்தில் குமரா திருமால் மருகான்ை சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்தஇம் மெய்யிற் சிரங்கை விடியுமட் டும்.சொரியக் கையிரண்டு போதாது காண். {1} வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்; சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம் குறைந்திடக் காணேன், குமரா சிரங்கு மறைந்திடத் தாநீ வரம். (2) உண்ட மருந்தாலும் உடமுழு தும்பூசிக் கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு சிரங்கப்ப ராயா சினம்மாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு (3) முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம் பத்தியொளி வீசு பதக்கமெலாம் - சித்தன் சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம் (4) இந்தப் பாடல்கள் சோகம் கலந்த நகைச்சுவையுடன் மிளிர்கின்றன. முருகன் புகழ் மாலை: இந்தத் தலைப்பில் நான்கு பாடலகள் உள்ளன." ஈண்டு இரண்டு தரப் பெறுகின்றன. 14. ம.மா. கதம்பம் - சிரங்கு 15. ம.மா. பக்தி மஞ்சரி - முருகன் புகழ்மலை