பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 57 + ஏழையுளந் திருக்கோயில் எனக்கொண்டு நீயும் எழுந்தருளி யிருக்குமுறை அறிந்து,அடிமை அங்கே சூழவரு வஞ்சனையைத் துரத்தி, நிறை அன்பாம் சுந்தரகாண் மலர்மாலை சூட்டிநிதம் தொழுவேன் (7) சின்னஞ் சிறிய மலர்.இந்தச் சிறிய மலரைக் கொய்திடுவாய்; இன்னும் காலம் செல்லின்,ஒளி, ளிஇழந்து வாடி விழுந்திடுமே (9) மனமும் நிறமும் இல்லாவோர் மலரே எனினும் ஐயாநின் பணியிற் சேரத் தாழாது பறித்துக் கொள்ள வேண்டினனே (12) அன்பின் வெற்றி: இந்த வரலாற்றுக் கவிதையும் தெய் வத் தமிழில் அடங்கும். தமிழ்நாட்டிலுள்ள ஆண்டாள் வரலாறு போலவே வடநாட்டில் மீராபாய் என்ற பக்தை யின் வரலாறு வழங்கி வருகிறது. ஆண்டாள் பாடிய பாசுரங்களையொப்ப இந்தி மொழியில் மீராபாயின் பாடல்கள் புகழுடன் வழங்கி வருகின்றன. கவிமணி அவற்றைத் தழுவி முப்பத்து நான்கு தமிழ்ப் பாடல்களை வார்த்துள்ளார். அவை யாவும் அன்பொழுகும் அற்புதக் கவிதைகளாகும். மீராபாய் கிரிதர கோபாலன் தன்னை மணந்ததாகக் கனவுகண்டு அதனைத் தன் தாயிடம் உரைக்கின்றாள். அன்னையே! தாயே! அழகன் சகதீசன் என்னை மணக்க இரவில் கனாக் கண்டேன் நென்னல் இரவுகண்ட நீண்ட கனாமுழுதும் ஒன்றை ஒழியாமல் உரைக்கின்றேன் கேளம்மா (1) நங்கையர் கூடி நலங்கனிந்து, என்மீது குங்குமம் பூசிக் குளிர்சந் தனம்பூசி, மங்கள மாக மஞ்சள் மிகப்பூசி அங்குநீ ராட்டக் கணாக்கண்டேன்; அம்மாநான் (3)