பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 58 * கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு தோரணம் நாட்டித் துளாய்மாலை தொங்கவிட்டுப் பூரண கும்பம் பொலிவாக முன்வைத்துத் தாரணி போற்றத் தகுமோர் புரோகிதர்வந்து, ஆரணம் ஒதக் கனாக்கண்டேன்; அம்மாநான் (4) செய்தற் கரிதாம்அத் திருமணப் பந்தரின்கீழ், வையம் அளந்து வளர்ந்த வடிவழகன், ஐம்பத் தறுகோடி ஆட்கள் நடுவேஎன் கையைப் பிடிக்கக் கனாக்கண்டேன்; அம்மா!நான் (5) முன்செய் தவப்பயனால் முகுந்தன் கிரிதரனே அன்பு நிறைந்திடுமென் அகமுடையானாக வந்தான் இன்ப மணமும்நேற் றிரவிலே யானதுஅம்மா! துன்பம் ஒழிந்ததம்மா! சுகமும் பிறந்ததம்மா! (6) ஆண்டாள் பாசுரங்கள் தலைவி (மகள்) தோழிக்குச் சொல்வனவாக அமைந்துள்ளன. வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறம்எங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன், தோழி!நான் (1) கதிர்ஒளித் தீபம் கலசம் உடன்ஏந்திச் சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதரக் கனாக்கண்டேன், தோழி!நான் (5) மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுஊத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி!நான் (6) வாய்நல்லார் நல்ல மறைஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,