பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-}- (30་ བསྒྲིགས་ལ་ கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நித்தம் நித்தம் நீராடில் நெடுமால் அருமைப் பெறலாமேல் தத்தும் தவளை மீன்களும்அத் தனிப்பே றடைய வேண்டாவோ? (7) காயும் கனியும் அருந்துவதால் கண்ணன் கழலைப் பெறலாமேல் ஆயும் கிளைவாழ் குரங்குகளும் அப்பே றடைய வேண்டாவோ? (8) வாடும் புல்லைத் தின்பதனால் மாயன் கிருபை பெறலாமேல், ஆடும் மாடும் மான்களும்அவ் அரும்பே றடைய வேண்டாவோ (9) பெண்ணின் இன்பம் துறப்பதனால் பெருமான் பாதம் பெறலாமேல் மண்ணில் எல்லா அலிகளும்அம் மாப்பே றடைய வேண்டாவோ! (10) பாலை நிதமும் குடிப்பதனால் பரமன் அடியைப் பெறலாமேல், ஞால மீது சிசுக்களும்அந் நற்பே றடைய வேண்டாவோ (11) இவ்வாறு எதனாலும் எம்பெருமானைக் காண முடியா தவர், உண்மையான அன்பால்தான் அவனைக் காண முடியும் என்கின்றாள் மீரா, உண்மை யன்பை உடையவரே உலகை அளந்த பெருமானை, அண்மை யாகக் கண்டிடுவர் அல்லார் காணார், கானாரே (12) இங்ங்னம் மீரா ஒரு சீர்திருத்தச் சமயவாதிபோல் பேசுகின் றாள.