பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 61 + போஜ ராஜன் குடும்பம் சக்தி வழிபாட்டைக் குலதர்ம மாகப் பெற்று வந்த பரம்பரையது. மாமியார் திருமால் வழிபாட்டைப் பொறுக்காமல் கிரிதர கோபால விக்கிரகத் தைப் பிடுங்கி எறிகின்றாள். மீராவின் வருத்தம் பாடல்க ளாக மலர்கின்றது. இங்குள்ள ஐந்து பாடல்களும் கல் நெஞ்சத்தையும் உருக்குபவை. மூன்று பாடல்கள் ஈண்டுத் தரப் பெறுகின்றன. கண்ணனைக் காணாமல் காதல்.கைம் மீறியது பெண்ணின் நலமிழந்தேன் பெரும்பித்தி யாகிவிட்டேன்; புண்னைப் பொறுத்தவரும் புண்செய் தவறுமல்லால்; மண்ணில் அதன்வருத்தம் மற்றோர் அறிவாரோ? (13) நஞ்சினை யுண்டு நலியு மவர்போல, விஞ்சு மதன்கொடுமை வேறெவரும் காண்பாரோ? நெஞ்சத் துயரமெலாம் நீங்க, முகில்வண்ணன் அஞ்சல் அளித்தென்னை ஆட்கொள்வ தெந்நாளோ? (14) அன்பர் படுக்கையுமவ் வாகாய மீதேயாம் என்றன் படுக்கையுமிங்கு ஈட்டிகளின் மேலேயாம்; வன்பில் விதி.எனக்கு வகுத்தவழி ஈதானால், இன்ப நலமெல்லாம் எவ்வா றடைவதம்மா? (15) ஒருநாள் மீரா நைவேத்தியத்தை இறைவன் திருமேனி முன் வைத்து அதனை உண்ணும்படி வேண்டுகின்றாள். விதவிதமாய்ப் பண்டங்கள் செய்து வைத்தேன்; விண்ணமுத மெனக்கறிகள் சமைத்து வைத்தேன்; இதமுறவே என்மீதில் இரங்கி, நீஇவ் இராஜவிருந் துண்டருள வேண்டும்; ஐயா! பதமலரை முடியணிந்து பணிந்து நின்றேன்; பகவானே! கிரிதரனே! பாரில் என்றும் சதமெனவே நம்பிவரும் அடியா ருள்ளம் சலியாது காத்தாளும் தேவ தேவே! (19)