பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் + 67 + ஏசுவி னைச்சிலுவை - மரத்தில் ஏற்றிக் கொல்வதென்றே நாசகா லர்கூடி - விதியங்கே நாட்டி விட்டார்.ஐயோ! (21) “மன்னுயிர் காத்திடவே - இங்கு வந்து பிறந்தமகன் தன்னுயிர் காக்கவொண்ணாது - இன்று தயங்கி நிற்கின்றான்! (22) முழக்கம் செய்துவந்தான் - வழக்கை முடித்து நிற்கின்றான்; ஒழுக்கம் காட்டவந்தான் - இங்கே உயர்வு பெற்றுவிட்டான்' (23) என்று பற்பலரும் - அவனை ஏளனம் செய்துநின்றார்; ஒன்றும் உரையாமல் - உரவோன் உள்ளம் அடங்கிநின்றான் (24) 'யாதும் அறியாதார் - அவர்பிழை யாவும் பொறுத்திடுவாய், நாதனே' என்றீசன் - அருளை நயந்து வேண்டிநின்றான் (25) 'உன்னையே நம்பிநின்றேன் - உதவிக்கு ஒருவரை யும்கானேன்; என்னைக்கை விட்டனையே! - ஈசா!' என்று வருந்திநின்றான் (27) சரணம் நீயென்றே - தலையைத் தாழ்ந்து நின்றதலால், மரண வேளையிலும் - ஈசனை மறந்த தில்லை அவன் (29)