பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் * 69 米 சென்று வரும் பேறு ஏற்பட்டது (அக்டோபர் - 1968)" குவலயத்தில் அருள் மாரி பொழியும் ஐயன் புத்தர் பிரான் ஞான ஒளி பெற்ற இடத்திற்கு வந்ததும் என்னையறியாத புத்துணர்ச்சி என்பால் எழுந்தது. கூச்சல், குழப்பம், கேளிக்கை முதலான நிகழ்ச்சிகள் ஒன்றும் இல்லாத அமை தியான இடத்தை முதன் முலாக இங்குத்தான் கண்டேன். ஒரு சிலர் அங்குமிங்கும் நடமாடினாலும் அவர்கள் நடையிலும் பேச்சிலும் அமைதி காணப் பெற்றது. அமை தியான சூழ்நிலை தியானத்திற்கு ஏற்ற இடமாகத் திகழ்ந் தது. இந்த இடத்தில் போதி மரத்தடியில் ஞான ஒளி கண்ட புத்தர் பிரான் 'ஆசிய சோதி' யாக மலர்ந்த வரலாற்று நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக என் மனதில் விரைந்து குமிழியிட்டெழுந்தன. நானும் இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன் புத்தர் பிரான் வாழ்ந்த காலத்திற்குத் தள்ளப் பெற்றேன் - மானசீகமாக. பாவனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். தேவர் அவையில் இறைவன் பேசிய அருளுரை என் மனக் காதில் கேட்டது. “வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்; வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்; மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டி நன்மை விளைவிப்பர் எவரையுமே கண்ணிற் காணேன் (1) எண்ணரிய சென்மங்கள் எடுத்து முன்னம் எவ்வுடம்பின் எவ்வுயிர்க்கும் இடர்க ளைந்தேன்; மன்னுலகம் ஈடேற இன்னும் ஓர்கால் மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்; (2) 22. 1968 - அக்டோபர் 12-14 அனைத்திந்திய கீழ்த்திசை மாநாடு (24வது அமர்வு) வாரணாசியில் நடைபெற்றது. இதற்கு என் மனைவியையும் இட்டுக் கொண்டு காசிக்குச் சென்றபோது கயை, புத்த கயை, அயோத்தி முதலான இடங்கட்குச் சென்றுவரும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டேன்.