பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

幸、70 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு எனக்குமிலை; என்னைவழி பட்டு வாழும் ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை; உண்மையீது எந்நாளும் உன்மை யாமால்! (3) வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால் வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு யானும்ஒரு மகனாகச் செல்வேன்" (4) என்று புத்தர் அவதரித்த செய்தி அறிந்தேன். பின்னர் அவர் மக்கள் அல்லலுறுங் காரணத்தை அறிய காடு மலை முதலிய இடங்களிலெல்லாம் அலைந்து திரிந்த வரலாறு கள் எல்லாம் என் மானதக் காட்சியில் புலனாயின. அவர் யசோதரையை மணந்ததும், அவள் அந்தப்புரத்தில் இருந்த போது அவர் மட்டும் தேவகீதம் கேட்டதும், பின்னர், "புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதி லாத பஞ்சனை யாகும்; பாழிட மான பாலையை நல்ல வாழிட மாக மதித்து வாழ்வேன்; ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த் தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்; பணிசெய் பள்ளர் பறையர் அணியும் துணியை அறையில் சுற்றித் திரிவேன்; தெருத்தெரு வாகத் திரிந்து பெற்ற பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்' என்று சொல்லிக் கொண்டு துறவு பூண்டதும் யசோரையை நோக்கி, “நீள்நில மீது நித்தியா னந்த வாழ்வை யடையும் வழிஇது என்று 23. ஆசிய சோதி - புத்தர் அவதாரம் (அடி 1,2,3,4) 24. ஆசிய சோதி சித்தார்த்தர் துறவு - (அடி 66-75)