பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் 米 了盘 + தீவிர மானதியாகத் தாலும் ஓய்வில் லாத உழைப்பி னாலும் அறியலா மென்னில் அறிந்து வருவேன் வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம் அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்" என்று கூறி வெளியேறியதுமான நிகழ்ச்சிகள் படக்காட்சி காண்பதுபோல எனது மானதக் காட்சியில் தெரிந்தன. பின்னர், வழிநடந்த களைப்பால் ஓர் ஏழை இடைச் சிறுவன், கலத்தில் கறந்து தந்த பாலைப் பருகித் தளர்ச்சி நீங்கியதும் பிம்பிசார மன்னன் செய்யும் வேள்விக்காக நடத்திச் செல்லப் பெற்ற ஆட்டு மந்தையைக் கண்டு இரங்கியதும், துள்ளும் மறியொன்றினைச் சுமந்து கொண்டு, “மானேந்தும் ஈசன் உளம் நாண ஆட்டின் மறியேந்து பெருங்கருணைப் புனித வள்ளல்" பிம்ப சாரணின் மாநகரின் திருவாயிலில் வந்தபோது கண்ட காட்சிகளும், யாகம் செய்யும் தீட்சிதருக்கும் புத்தர் பிரானுக்கும் இடையே நடைபெற்ற வாதப் பிரதிவாதங்க ளும், யாக தீட்சதருக்குப் புத்தர் பிரான் தந்த, மன்னுயி ரெல்லாம் உலகில் - ஒருதாயின் மக்களென் றுண்மை அறிந்தீரோ (58) தாயென நம்பி வரும்உயிரை - யாக சாலை நடுவில் கிடத்திஒரு பேயெனக் கீறிப் பிளப்பதனால் - என்ன பேறும் பெருமையும் பெற்றீரையா? (61) 25. மேலது - மேலது (அடி 256-262) 26. மேலது - கருணைக் கடல் - 15