பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

斗 76 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நாவிக் கொழித்த நாவுரிக் கடுகையும் அளந்துஎன் மடியில் அளித்திட வந்தனள். (10) 30 என்பதையும், இட்ட கடுகை ஏற்பதன் முன்னம் தாயரே, நீவிர் தங்கும் மனையிது சாவறி யாத தனிமனை தானா? தந்தை தாயர் தமக்கை தங்கை மைந்தர் எவரும் மரித்ததும் உண்டோ? உரைத்திடும்' (20-21) என்று தான் வினவியதையும், அதற்கு அவள், 'வினவியது என்னை? விரிநீர் உலகில் பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார் என்கை இயல்பே அம்மா! காலையில் உதித்த கடுங்கதிர்ச் செல்வன் (21-25) மாலையில் தளர்ந்து மறைவதும் இலையோ? இம்மா நிலத்தில் இறக்கையின் குறிப்பெலாம் அம்மா நீயும் ஆய்ந்திலை போலும் (26-28) என்று உரைத்து, கணவனை இழந்த கைம்பெண், தந் தையை இழந்த தனயள், மைந்தனை இழந்த வறியவள், தமையனை இழந்த தங்கை, மாமனை இழந்த மருகி, அன்னையை இழந்த அகதி என்று ஒவ்வொருவரையும் தனித்தனியே இனங்காட்டி, - பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் உலகின் இயற்கை (36-37) என்ற தத்துவ உண்மையையும் எடுத்துக் காட்டுகின்றாள். பிறிதொரு வீட்டில் சென்றபோது அங்குள்ள பெண் ஒருத்தி இவள் கையிலிருந்த கடுகை வாங்கி அளந்து கட்டி வைதது, 30. ஆ.சோ. புத்தரும் மகனிழந்த தாயும் - அடி.15