பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இசைத்தமிழ் 1943 இல் தமிழ்நாட்டில் பொங்கி எழுந்தது தமிழிசை இயக்கம், இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் முன் னின்று இந்த இயக்கத்திற்கு ஒரு புதிய வேகத்தை நல்கி ாைர். கல்கி, இராஜாஜி, டி.கே.சி. முதலியோருக்கு இதில் பெரும் பங்கு உண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இதற்குப் பெரும் ஆதரவு அளித்தது. இதன் விளைவாகச் சென்னையில் தோன்றியதுதான் அண்ணாமலை மன்றம். தமிழிசை இயக்கம் தோன்றுவதற்கு முன்னர் இராம லிங்க அடிகள் பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். இவ ருக்கு முன்னர் இயற்றப் பெற்ற இராம நாடகக் கீர்த்தனை கள், நந்தனார் கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. சங்கரதாஸ் சுவாமிகள், இலட்சுமண பிள்ளை, பம்மல் சம்பந்த முதலி யார் முதலியோர் படைத்த நாடகங்களில் பெரும்பாலும் பாட்டுகள் (கீர்த்தனைகள்) இருந்து வந்தன. பிற்காலத்தில் கந்தசாமி முதலியார், பவானந்தம் பிள்ளை, தெ.பொ. கிருட்டின சாமிப் பாவலர், டி.கே. முத்துசாமி, எஸ்.டி. சுந்தரம், பி.எஸ்.இராமையா, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, அறிஞர் அண்ணா இவர்களால் படைக்கப் பெற்று நடிக்கப் பெற்ற நாடகங்களிலும் ஒரு சில கீர்த்தனைகள் தலைகாட் டத்தான் செய்தன. பாரதியாரும் வந்தே மாதரம்' 'பாரத நாடு', 'பாரத தேசம் முதலான கீர்த்தனங்களைப் பாடி இசைத் பா.க தே.கீ. வந்தே மாதரம் மேலது மேலது - பாரத நாடு மேலது - மேலது பாரததேசம் கண்ணம்மாவின் எழில், இராதைப் பாட்டு, ஐயம் உண்டு, ஆரிய தரிசனம் முதலான தேகத்திரப் பாடல்களைக் காண்க.