பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 80 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பல்லவி மண்டபம் வாழ்கவே - பாரதி மண்டபம் வாழ்கவே அதுபல்லவி தண்டமிழ் போல அவன் தந்த கவிகள் போல எண்டி சையும் போற்றும் இமய மலையே போல (மண்டபம்) சரணம் பாரத சக்திவளர் பீடமாய் பைந்தமிழ்க் காலயமாய் வீர சுதந்தி ரத்தின் வெற்றி நிலைக் களமாய் சூரிய சந்திரர் இத் தொல்லுல குள்ளளவும் (மண்டபம்) இதுபோன்ற இனிமையும் அழகும் வாய்ந்த கீர்த்தனங்கள் பல பாடியுள்ளார் கவிமணி. தமிழ்நாட்டில் இசையும் அபிநயமும் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நமது பண் பாட்டின் மேன்மையை நன்கு உணர்த்துகின்றன. கவிமணி யின் கீர்த்தனங்களையெல்லாம் தொகுத்துதே.வி.யின் கீர்த்த னங்கள் என்ற பெயரில் வெளியிடப் பெற்றுள்ளன." இங்ங்ணம் பல கீர்த்தனங்களையும் பாடியருளிய கவி மணி இசைப் பயிற்சி பெற்றவரல்லர். இசைப் பயிற்சியே பெறாத ஒருவர் கீர்த்தனங்கள் முதலியவற்றைப் 5. பாரி நிலைய வெளியீடு (1953)